Samarthiya Villan

Make Some Different Illusions...

உனக்கென்ன வேணும் சொல்லு

Monday, September 23, 2019

Be Like Magnet (PEOPLE MANAGEMENT PART 2) (தமிழ்)




People Management (PART 2)
(தமிழில்)


க்கள் நமது கருத்துக்களை மதிக்க என்ன செய்ய வேண்டும்:






PART 01 Link(தமிழ்): https://samarthiyavillan.blogspot.com/2019/08/people-management-specially-for.html


Chapter 03: மக்களை முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக உணரச் செய்வது எப்படி?


மனிதகுலத்தின் ஒரு பொதுவான குணாதிசயம்,நமக்கும் மற்ற மனிதர்கள் அனைவருக்கும் அடிப்படையாக உள்ள ஒன்று,தாங்கள் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதுதான்.நமது ஆளுமையின் கீழ் அனைத்து மக்களையும் கொண்டுவர ஒரு முக்கியமான யுக்தியும் இதுதான்.

அவர்களை நாம் மிக முக்கிமான நபராக கருதுகிறோம் என்ற உணர்வை ஆழமாக பதிய வைத்தல் வேண்டும்.அவர்களுக்கு நீங்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறிர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள்.தன்னை அறியமலே அவர்கள் உங்களது அடிமைகளாக மறிவிடுவர்.

எந்த ஒரு மனிதனும் தான் சாதாரணமாக நடத்தப்படுவதை விரும்புவது இல்லை,ஏன் நாம் கூட நம்மை சாதாரணமாக நடத்தும் இட்த்தில் இருப்பதில்லை

ஓருவரை நாம் அலட்ச்சியப் படுத்தும்போதோ,அவர்களது கருத்துக்களை மட்டுப்படுத்தும்போதோ,அவர்கள் நாம் அற்பமாக நடத்தப்படுகிறோம் என உணர்வார்கள்.இந்த உணர்ச்சி உங்களிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.



நம்மை முக்கியமானவராக உணரவைக்க சில வழிகள்:


1. மக்கள் பேசுவதை காதுகொடுத்து உன்னிப்பாக கேளுங்கள்.அல்லது, நீங்கள் அவர்களது கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தருகிறீர்கள் என உணரவையுங்கள்.

2. எப்பொழுதும் சிறியது முதல் பெரிய விஷயங்கள் அனைத்திற்கும் அவர்களை நேர்மையான முறையில் பாராட்டி தட்டிக்குடுங்கள்.உங்களது பாராட்டு, அவர்களை தாங்கள் செய்த செயல் மிக முக்கியமானது என உணர வைக்கும் அளவிற்கு இருத்தல் அவசியம்.

3. அவர்களின் பெயரை நன்கு நியாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.அதுபோல் பிழையில்லாமல் அவர்களின் பெயரை உச்சரியுங்கள்.அடிக்கடி அவர்களது பெயரைச் சொல்லி மரியாதயாக கூப்பிடுங்கள்.(அனைவரும் இதை விரும்புவர்)

4. ஒருவரின் கேள்விக்கு உங்களிடம் பதில் இருந்தாளும் ,உடனே பதில் கொடுக்காமல் சிறிது இடைவெளிவிட்டு பதில் கொடுங்கள்.இது அவர்களை தனது வார்த்தைக்கு முக்கியத்துவம் உள்ளதாகவும்,தனது வார்த்தையைப் பற்றி நீங்கள் சிந்திப்பதாகவும்,அவர்களை நீங்கள் மதிப்பதாகவும் உணர செய்யும்.
அப்படி உங்களால் அந்த சூழலில் இடைவெளிவிட்டு பதில் கொடுக்க முடியவில்லை என்றால்,நீங்கள் சொன்னால் சரியாக இருக்கும் ,உங்களுக்காக இதை செய்கிறேன் என்று அவர்களை மய்யப்படுத்தி பதில்களைக் கொடுங்கள்.முக்கியமாக நீங்கள் இடைவெளிவிட்டு பதில் கொடுப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை என தெரிந்தால் உடனே அதை கைவிட்டுவிடுங்கள்.

5. உங்களிடம் ஒருவர் பேசக்காத்திருந்தாளோ,அல்லது உங்களைப் பார்க்கக் காத்திருந்தாளோ,முதலில் அவர்கள் வந்திருப்பதும் காத்திருப்பதும் உங்களுக்கு தெரியும் என்பதை தெரியப்படுத்துங்கள்.இது அவர்களை நீங்கள் முக்கியமானவராக கருதுவதாக உணரச் செய்யும்.அதுபோல “தங்களை காக்க வைத்தமைக்கு மன்னிக்கவும்” அல்லது “எனக்காக காத்திருந்தமைக்கு நன்றி” போன்ற கனிவான வார்த்தைகளைப் பேசுங்கள்.

6. ஒரு குழுவில் உள்ள அனைவரிடமும் கவனம் செலுத்துங்கள்.அனைவரையும் முக்கியமானவராக உணரச் செய்யுங்கள்.

7. ஒருவருக்கு நீங்கள் முக்கியத்துவம் அளித்தால் அவர்கள் தங்களுக்கு ஒரு பொறுப்பு இருப்பதுப் போல உணர்வார்கள்.உங்களது வேலைகளை அவர்கள் பொறுப்புடன் செய்வார்கள்.


"சுயநலனை இழந்தால் சுயமரியாதைக்கூடும்"


(தொடர்ந்து படிப்போம்......)


இந்தப்பதிவின் தொடர்ச்சி விரைவில்....பயனுள்ளதாக உணர்ந்தால், மிக உன்னதமான படிக்கும் பழக்கமுடைய உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.



No comments:

Post a Comment