Samarthiya Villan

Make Some Different Illusions...

உனக்கென்ன வேணும் சொல்லு

Saturday, August 24, 2019

People Management(PART 1) (தமிழில்) (Specially For Bussiness Peoples and Youngsters)


English Version: https://samarthiyavillan.blogspot.com/2019/09/people-management-specially-for.html

மக்களைக் கையாளும் திறன்
(அனைத்து இளைஞர்களும் முக்கியமாக மேம்படுத்த வேண்டியத் திறன்)

Chapter 01: மக்களையும் மனித இயல்புகளையும் புரிந்துகொள்ளுதல்


                                 மக்களைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் முதல் படி,அனைத்து மக்களும் சுயநலம் கொண்டவர்கள் என ஆராய்ந்து அறிதல் வேண்டும். மக்கள் அனைவருக்கும் பிறறைவிட தங்கள்மீதே அதீத விருப்பம் உண்டு. அவர்கள் பிறறை நேசிப்பது கூட தனது நலன் மற்றும் சந்தோஷத்திற்காகதான் என்பதை நங்கு அறிந்து செயல்படுங்கள்.

                                  ஒவ்வொருவரும் எந்த காலத்தில் எந்த சூழலில் அந்த சுயநல எண்ணத்தை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள்,எவ்வாறு அதை மூடிமறைக்கிறார்கள் என்பதை நங்கு கூர்ந்து ஆராய்தல் வேண்டும். நம்மை சுற்றி இருப்பவர்களை நன்றாக கவனித்தாலே மிக சுலபமாக அனைவரையும் பற்றி அறியலாம். முடிந்த அளவிற்க்கு அதிகமான மக்களுடன் ஆழ்ந்து உரையாட வேண்டும்.உங்களுடைய கேள்விகளுக்கு அவர்களின் பதிலும் , செயல்பாடுகளும் எப்படி உள்ளது என கவனித்து அவர்களின இயல்புப் பற்றி நாம் புரிந்துக்கொள்ளலாம்.



Chapter 02: மக்களிடம் திறம்பட பேசுவது 

                                  
                                 பேச்சுத்திறன் என்பது அனைவருக்கும் கண்டிப்பக இருக்க வேண்டிய மிக முக்கியமான திறன். "வாய் உள்ள புள்ள பொழச்சிக்கும்" என்ற அக்காலத்து மொழியை நினைவில் கொண்டு,மக்களை எப்படி கையாள வேண்டும் என பார்ப்போம்.

                                 எப்படிப்பட்ட குணமுடைய மனிதனையும் முறையான பேச்சுத் திறனால் நமது ஆளுமைக்கு கீழ் கொண்டு வரமுடியும். எப்பொழுதும் மக்களிடம் பேசுகையில் அவர்களை கவரும் வகையில் சுவாரசியமான விஷயங்களைப் பற்றி பேசுதல் அவசியம். மனிதனின் அடிப்படை இயல்பின்படி அவர்களுக்கு சுவாரஸ்யமான மற்றும் அவர்களை கவரக்கூடிய விஷயம் என்னவென்றால் அது அவர்களைப் பற்றியே நீங்கள் பேசுவதுதான். ஆம், மனிதனாய் பிறந்த அனைவருக்கும் ஆழ்மனதில் தீராது இருக்கும் ஆசை தன்னைப்பற்றி பிறர் பேச வேண்டும் மற்றும் புகழ வேண்டும் என்பதே. இதை நாம் பயன்படுத்தி மக்களால் விரும்மக்கூடிய ஒருவராக மாறலாம்.

                                             மக்களிடம் பேசுகையில் கண்டிப்பாக "நான்,எனது,என்னுடைய,எனக்கு,எங்களுக்கு" என்று தன்சாரும் வார்த்தைகளை முழுதாக நீக்கி விடுங்கள். அதற்கு பதிலாக "நீங்கள்,உங்களது,உங்களுக்காக,உங்களுக்கானது" போன்ற பிறர்சார் வார்த்தைகளை கவரும் வண்ணம் நயமான இடத்தில் பொருத்தி பேசுதல் அவசியம்.   
                                    பிறர் மத்தியில் உங்களுக்கன சூயநலனை விட்டுக் கொடுக்கத் தயாராக நீங்கள் இருந்தால்,பெரிய ஆளுமைத் திறனோடு நீங்கள் விளங்குவீர்கள்.நாம் பேசுவது மற்றும் செய்வது அனைத்தும் மக்களுக்கனது என அவர்களை பரிபூரணமாக நம்ப வைத்தல் அவசியம், அப்பொழுதுதான் அவர்கள் உங்கள் ஆளுமைக்கு கீழ் வருவார்கள்.

                                    நாம் எப்படி நம்மைப் பற்றி பேச ஆர்வம் காட்டுகிறோமோ, அதைபோலவே மக்களும் அவர்களைப் பற்றி பேச விரும்புவார்கள்.முக்கியமாக உரையாடகளில், மக்கள் அவர்களைப் பற்றி பேசுவதற்கு நாம் பெரிதும் இடம் கொடுத்து,சுலபாமாக அவர்களை அந்த உரையாடலில் அவர்களைப் பற்றி அவர்களே பேசும்படி செய்தல் வேண்டும். உதாரணமாக, அவர்களீன் குடும்ப நலனைப் பற்றி விசாரித்தல்,தொழில் அல்லது அவர்களது வேலைகளைப் பற்றி விசாரித்தல் போன்றவற்றை பேசி அவர்களைத் தூண்டிவிடுதல் அவசியம்.

                                       ஒரு உரையாடலில் நமதுப் பேச்சு (25%) சதவிகிதத்திலும்,மற்றவரின் பேச்சு (75%) சதவிகிதத்திலும் இருக்க வேண்டும். நீங்கள் பேசும் (25%) சதவிகிதம் தான் அவர்களை (75%) சதவிகிதம் பேச வைக்கும்.அதேபோல நாம் பேச நினைக்கும் அனைத்தையும் அந்த (25%) சதவிகித உரையாடலில் அவர்களுக்கு தெகட்டா வண்ணம்,அவர்கள் ரசிக்கும் வண்ணம் பேசிமுடித்தல் வேண்டும்.இது அவ்வளவு சுலபமல்ல ,ஆனால் திறனாலும் முயற்சியாலும் கைக்கூடும்.

                                        இப்படி பேச வைப்பதன் மூலம்,மக்கள் ஒருவித ஆர்வத்தில் தங்கலைப்பற்றிய ரகசியங்களைக்கூட உங்க்களிடம் சர்வசாதாரணமாக பகிர்ந்துக்கொள்வார்கள்.ஆகையால் பிறறைப்பற்றிப் பேசி,அவர்கள் தன்னைப்பற்றி தானே பேச வைத்தல் வேண்டும்.இதுவே மிகப்பெரிய யுக்தி. 


                                                              (தொடர்ந்து படிப்போம்......)


இந்தப்பதிவின் தொடர்ச்சி விரைவில்....பயனுள்ளதாக உணர்ந்தால், உலகிலேயே மிக மிக உன்னதமான படிக்கும் பழக்கமுடைய உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

No comments:

Post a Comment